March, 2013
கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்துண்டால் துடைத்து விட்டு.. “இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?” என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் “ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.. “இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!” என்றார். அவன் எழுந்து கேட்டான் “நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?” என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. “நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?
பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வராய் பதவி வகித்திருந்த சமயம், ஊரிலிருந்து அவரது தங்கை நாகம்மையிட்மிருந்து ஒரு கடிதம் வந்தது, அதில், “அண்ணே! எனக்கு உடம்பு சரியில்லை, மருத்துவம் பார்க்க பெரிய டாக்டரிடம் போக வேண்டும், அதற்கு நிறைய பணம் வேண்டும் அனுப்பி வையுங்கள் ” என்று எழுதி இருந்தார்கள்.
இதைப் படித்த காமராஜருக்கு கோபம் வந்து விட்டது, உடனே அவர் 20 ரூபாய் பணத்தை மட்டும் மணி ஆர்டரில் அனுப்பிவிட்டு கீழ் கண்டவாறு ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்.
அன்பு நாகம்மை நீ பெரிய டாக்டரிடம் எல்லாம் போக வேண்டாம்! மதுரையிலேயே அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கு. அங்கெ போனால் இலவச வைத்தியம் கிடைக்கும். உன் கை செலவுக்கு 20 ரூபாய் மட்டும் அனுப்பி இருக்கிறேன். இதற்கு மேல் என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே…!
கண்டுபிடிக்கப்பட்டது முதல் இன்றுவரை வடிவமைப்பில் மாறுதல் இல்லாமல் இருப்பது ‘சேஃப்டி பின்’ மட்டுமே. இது, 1849-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது. … Read More »
திரைப்படங்களில் கிராமத்து சீன். கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க ம…ுடியாது. ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ‘ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்’ (கவனியுங்கள்: ‘மில்லியன்’ அல்ல ‘ட்ரில்லியன்’) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!
பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:
1. “காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது.” என்கிறார்.
6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். … Read More »
A couple had their wedding rings engraved with a waveform of their own voices saying “I do.”
The rings are made by designer Sakura Koshimizu. http://sakurakoshimizu.com/