பெருந்தலைவர் காமராஜர்

  • March 12, 2013

பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வராய் பதவி வகித்திருந்த சமயம், ஊரிலிருந்து அவரது தங்கை நாகம்மையிட்மிருந்து ஒரு கடிதம் வந்தது, அதில், “அண்ணே! எனக்கு உடம்பு சரியில்லை, மருத்துவம் பார்க்க பெரிய டாக்டரிடம் போக வேண்டும், அதற்கு நிறைய பணம் வேண்டும் அனுப்பி வையுங்கள் ” என்று எழுதி இருந்தார்கள்.

இதைப் படித்த காமராஜருக்கு கோபம் வந்து விட்டது, உடனே அவர் 20 ரூபாய் பணத்தை மட்டும் மணி ஆர்டரில் அனுப்பிவிட்டு கீழ் கண்டவாறு ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்.

அன்பு நாகம்மை நீ பெரிய டாக்டரிடம் எல்லாம் போக வேண்டாம்! மதுரையிலேயே அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கு. அங்கெ போனால் இலவச வைத்தியம் கிடைக்கும். உன் கை செலவுக்கு 20 ரூபாய் மட்டும் அனுப்பி இருக்கிறேன். இதற்கு மேல் என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே…!

Leave a Reply

Your email address will not be published. Please mark all required fields.