காமராசரின் ஆட்சி காலம்

  • April 4, 2013

எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை?

காமராசரின் ஆட்சி காலம் ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்! நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக முன்னிருத்தினார்.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்! 1.நெய்வேலி நிலக்கரித் திட்டம் 2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை6.கல்பாக்கம் அணுமின் நிலையம்7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை11.துப்பாக்கித் தொழிற்சாலை12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்13.சேலம் இரும்பு உருக்காலை14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்17.சென்னை அனல்மின் நிலையம்18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலைஇவை மட்டுமா?மணிமுத்தாறுஆரணியாறுசாத்தனூர்அமராவதிகிருஷ்ணகிரிவீடூர்வைகைகாவிரி டெல்டாநெய்யாறுமேட்டூர்பரம்பிக்குளம்புள்ளம்பாடிகீழ்பவானிஎன்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை! அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14. இன்னும் சொல்லவா? 159 நூல் நூற்பு ஆலைகள்4 சைக்கிள் தொழிற்சாலைகள்6 உரத் தொழிற்சாலைகள்21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்ரப்பர் தொழிற்சாலைகாகிதத் தொழிற்சாலைஅலுமினிய உற்பத்தித் தொழிற்சாலைகிண்டி,விருதுநகர்,அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி…என்று தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார். மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் … Read More »

Leave a Reply

Your email address will not be published. Please mark all required fields.