வாழ்க்கை தத்துவம்!!!

  • April 20, 2013
  • 1 Comment

ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒன்றை புரியவைக்க நினைத்தார். எல்லாரையும் அழைத்து உக்கார வைத்து, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காண்பித்தார்.

அவ்வளவுதான், ‘வாழ்க்கைத் தத்துவம் இதுதான்’னு சொல்லி போகச் சொல்லிட்டார்.

சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே ஒரு சீடன் மட்டும் வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்துதிட போகுதுன்னு குழம்பினவன், மெதுவாக குருவையே எழுப்பி கேட்டான்.அவர் கேட்டார்.. ‘என் வாய்குள்ள என்ன இருந்தது?’

‘நாக்கும் உள்நாக்கும் இருந்தது!’

‘பல் இருந்ததா?’

‘இல்லை.’

‘அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.’    

1 Comment
Photo
Anonymous July 27, 2014

Leave a Reply

Your email address will not be published. Please mark all required fields.