Archive for month

May, 2013

தமிழ்நாடு பெயர் காரணம்!!!
  • May 24, 2013

சங்கரலிங்க நாடார் என்று அறியப்படும் கண்டன் சங்கரலிங்கனார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளி. இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்.உலகில் அதிக நாட்கள் கொள்கைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்தவர்.

வாழ்க்கை

காமராசர் படித்த பள்ளியில் படித்த இவர் வணிகத்தில் புகுந்து காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். நாடார் சமூகத்திற்காக அபிவிருத்திச் கங்கத்தையும் துவக்கிய இவருக்கு ராசாசி உட்படப் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திய சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டியாத்திரையிலும் பங்கு கொண்டிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்த அவர் குடும்பத்தினரைப் பிரிந்து தனித்து வாழ்ந்து தன்னுடைய சொத்துக்களை விருதுநகரில் உள்ள பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டார். பிறகு விருதுநகர் ஆலக்கரையில் ஒரு ஆசிரமத்தை அமைத்துத் தங்கியிருந்தபோதுதான் ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பாதிப்பிலும், ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தமிழ்நாடு பெயர் சூட்டுவதற்காக போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் உண்ணாவிரதத்தை நடத்த திட்டமிட்டார்

உண்ணாவிரதம்

காங்கிரஸ் அரசின் முன்பாக 1956 ஜூலையில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார் அவர். தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும். சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டவேண்டும். அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப்போல் வாழவேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழில்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று பன்னிரெண்டு கோரிக்கைகளுடன் ஜூலை 27ந்தேதி சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால் பொதுவுடமைக் கட்சியினரின் ஆலோசனையின்பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. அதற்குள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் … Read More »

மண்பாண்டங்கள்
  • May 22, 2013

நம் முன்னோர்கள் நம்மைவிட ஆயிரம் மடங்கு புத்திசாலிகள். அதற்கு ஒரு உதாரணம் தான் மண்பாண்டங்கள். வீட்டிற்கு தேவையான அனைத்து உபகரனங்களும் மண்ணிலிருந்து செய்து எடுத்துகொண்டனர். அதன் உபயோகம் முடிந்ததும் அதனை மண்ணிடமே சேர்த்துவிட்டனர்… எந்த பாதிப்பும் இல்லை மண்ணுக்கும் சரி…. மனிதனுக்கும் சரி….கரண்ட் செலவு இல்லை குளிர்ந்த நீருக்கு..

இன்று நாகரீகம் என்ற பெயரில் ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். அது மண்ணுக்கும் கேடு. மனிதனுக்கும் கேடு.  

வர்மக்கலை
  • May 14, 2013

ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று. இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்கக் கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நம் தமிழ்ச்சித்தர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..?! இந்த வர்மக்கலை ஒரு கடல். இதைப் பற்றி எழுத ஒரு பக்கம் போதாது. அதனால் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரும், ஞானபண்டிதரான முருப்பெருமானின் முதற் சீடருமான, கும்பமுனி, குருமுனி என அழைக்கப்பட்டுவரும், 1008 அண்டங்களையும் அருளாட்சி செய்பவரும், அகத்தியம் என்ற தமிழ்நூலைப் படைத்தவருமான சித்தபெருமான் அகத்தியர்.

இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ). “தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே”. என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்குச் சாட்சி. சித்தபெருமான் அகத்தியர் கற்பித்த சில வர்மக்கலைகளில் “அகஸ்தியர் வர்ம திறவுகோல்”, “அகஸ்தியர் வர்ம கண்டி”, “அகஸ்தியர் ஊசி முறை வர்மம் “, “அகஸ்தியர் வசி வர்மம்”, “வர்ம ஒடிவு முறிவு”, “அகஸ்தியர் வர்மக் கண்ணாடி”, “வர்ம வரிசை”, “அகஸ்தியர் மெய் தீண்டாக்கலை” ஆகியவை குறிப்பிடத்தக்கவை. “ஜடாவர்மன் பாண்டியன்” என்ற மன்னன் தான் இதில் வல்லவனாகத் திகழ்ந்தான். பின்னர் பாண்டிய இனம் அழியத்தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்குப் பின்னர் வந்த சோழர்கள் இதனைக் கற்றனர்.

பின்னர் இந்தக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது. காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி புத்தமதத்தைப் பரப்பச் சீனா சென்றபோது இந்தக் கலையும் அங்கு பரவியது. “Tenjiku Naranokaku” என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் “The fighting techniques to train … Read More »

Thalaivar Rocks!!!
  • May 12, 2013

A True Heart Melting Incident

In his Kelambakam farm house, Superstar Rajini was happily spending time chatting with his friend, Rajini’s friend said about a bajji shop which was just 4kms away and added that the bajji there tasted very good. Rajini got excited and told “Let’s go and eat”, Rajini’s friend was shocked, He said that if you come out, crowd will surround and it will be difficult to control them. Rajini told his friend not to worry as he is going to come with him in a different get up which the people cannot find easily, Rajini also convinced his friend by telling that he already has experience of mingling with the people in different get up.

Rajini and his friend started to the ‘bajji shop’ in the white FIAT car. It was 8.30 in the night, They parked the car some two streets before the bajji shop. Rajini was impersonating as a 85 year old man, very difficult to guess. On their way to the bajji shop, Rajini came across a very old woman looking very sad, Rajini to the old lady “Why amma you are standing here?” Old lady didn’t know it was Superstar Rajinikanth, … Read More »

கார்ல் மார்க்ஸ்!
  • May 7, 2013

ஒரு மனிதன் 15 ஆண்டு காலம் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்து தனது மூன்று பிள்ளைகளை வறுமைக்கு பலி கொடுத்த பின்பும் சிந்தனை, புத்தகம், எழுச்சி இதனை மட்டுமே சிந்தித்து உலகமே போற்றும் ஒரு புரட்சி நாயகன். மார்க்ஸின் மனைவி ஜென்னி தனது பிள்ளைகள் ஒவ்வொருவாராய் தாய்பால் கூட இன்றி வறுமையில் மடியும் வேளையிலும் தன் கணவரின் சிந்தனைகள் இதனால் தடைபடுமோ, வருததிற்குள்ளாகுமோ என்றே சிந்த்திதுள்ளார் அந்த தியாகப் பெண்!!! நட்பு என்னும் சொல்லுக்கு இலக்கணமாக கார்ல் மார்க்ஸின் கடைசி நாள் வரை தன்னால் இயன்ற மட்டிலும் கார்ல் மார்க்ஸின் வறுமையை தன் தோளில் சுமந்து தன் நண்பருக்கு உதவிய அவரது நண்பர் பிரடெரிக் ஏங்கல்ஸ்,

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்க இடமின்றி வாழ நேர்ந்த போதும் ‘சமதர்மகொள்கை’ என்ற தன் இலக்கிலிருந்து மாறவே இல்லை மார்க்ஸ் என்ற அந்த மாமனிதன். அவருக்கு வானம் வசப்பட்ட அளவிற்கு வாழ்க்கை வசப்படவில்லைதான். ஆனால் இன்றைய உலகில் ஒரு தொழிலாளியின் நலன் காக்கப்படும் ஒவ்வொரு கணமும் மார்க்ஸுக்குதான் நன்றி சொல்கிறது வரலாறு. மார்க்ஸின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் இதுதான்…துன்பமும், துயரமும் போட்டிப் போட்டுக்கொண்டு நம்மை தாக்கினாலும், நாம் வகுத்துக் கொண்ட இலக்கை நோக்கி நம் பயணம் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடர வேண்டும். அவ்வாறு தொடர்ந்தால் ஒருவேளை வாழ்க்கை வசப்படாவிட்டாலும், நிச்சயம் நாம் விரும்பும் வானம் வசப்படும்.

சிதம்பர இரகிசியம்!!!
  • May 7, 2013

சித்தர்களில் மிக முக்கியமான சித்தரான ஆசான் திருமூலர் அருளிய திருமந்திரத்தில்

“மானுடராக்கை வடிவு சிவலிங்கம்மானுடராக்கை வடிவு சிதம்பரம்மானுடராக்கை வடிவு சதாசிவம்மானுடராக்கை வடிவு திருக்கூத்தே”

என்று கூறுகிறார்.

அதாவது மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம் என்ற பொருளைக் குறிகின்றது.

சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது. இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது.

சித்தர்களின் உடற்கூற்று அறிவியல்படி ஒரு நாளில் மனிதரில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600. விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன,

பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த … Read More »

பாட்டி வைத்தியம்!!!
  • May 6, 2013

1. நெஞ்சு சளிக்கு – தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலிக்கு – ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.3. தொண்டை கரகரப்புசுக்கு – பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்க்கு – நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. வாய் நாற்றம் – சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6. உதட்டு வெடிப்புக்கு – கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7. அஜீரணம் – ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8. குடல்புண்க்கு – மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9. வாயு தொல்லைக்கு – வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10. வயிற்று வலிக்கு – வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11. மலச்சிக்கல் – செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12. சீதபேதி – மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13. பித்த வெடிப்புக்கு – கண்டங்கத்திரி இலைசாறை … Read More »