கார்ல் மார்க்ஸ்!

  • May 7, 2013

ஒரு மனிதன் 15 ஆண்டு காலம் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்து தனது மூன்று பிள்ளைகளை வறுமைக்கு பலி கொடுத்த பின்பும் சிந்தனை, புத்தகம், எழுச்சி இதனை மட்டுமே சிந்தித்து உலகமே போற்றும் ஒரு புரட்சி நாயகன். மார்க்ஸின் மனைவி ஜென்னி தனது பிள்ளைகள் ஒவ்வொருவாராய் தாய்பால் கூட இன்றி வறுமையில் மடியும் வேளையிலும் தன் கணவரின் சிந்தனைகள் இதனால் தடைபடுமோ, வருததிற்குள்ளாகுமோ என்றே சிந்த்திதுள்ளார் அந்த தியாகப் பெண்!!! நட்பு என்னும் சொல்லுக்கு இலக்கணமாக கார்ல் மார்க்ஸின் கடைசி நாள் வரை தன்னால் இயன்ற மட்டிலும் கார்ல் மார்க்ஸின் வறுமையை தன் தோளில் சுமந்து தன் நண்பருக்கு உதவிய அவரது நண்பர் பிரடெரிக் ஏங்கல்ஸ்,

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்க இடமின்றி வாழ நேர்ந்த போதும் ‘சமதர்மகொள்கை’ என்ற தன் இலக்கிலிருந்து மாறவே இல்லை மார்க்ஸ் என்ற அந்த மாமனிதன். அவருக்கு வானம் வசப்பட்ட அளவிற்கு வாழ்க்கை வசப்படவில்லைதான். ஆனால் இன்றைய உலகில் ஒரு தொழிலாளியின் நலன் காக்கப்படும் ஒவ்வொரு கணமும் மார்க்ஸுக்குதான் நன்றி சொல்கிறது வரலாறு. மார்க்ஸின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் இதுதான்…துன்பமும், துயரமும் போட்டிப் போட்டுக்கொண்டு நம்மை தாக்கினாலும், நாம் வகுத்துக் கொண்ட இலக்கை நோக்கி நம் பயணம் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடர வேண்டும். அவ்வாறு தொடர்ந்தால் ஒருவேளை வாழ்க்கை வசப்படாவிட்டாலும், நிச்சயம் நாம் விரும்பும் வானம் வசப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Please mark all required fields.