வர்மக்கலை

  • May 14, 2013

ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று. இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்கக் கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நம் தமிழ்ச்சித்தர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..?! இந்த வர்மக்கலை ஒரு கடல். இதைப் பற்றி எழுத ஒரு பக்கம் போதாது. அதனால் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரும், ஞானபண்டிதரான முருப்பெருமானின் முதற் சீடருமான, கும்பமுனி, குருமுனி என அழைக்கப்பட்டுவரும், 1008 அண்டங்களையும் அருளாட்சி செய்பவரும், அகத்தியம் என்ற தமிழ்நூலைப் படைத்தவருமான சித்தபெருமான் அகத்தியர்.

இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ). “தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே”. என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்குச் சாட்சி. சித்தபெருமான் அகத்தியர் கற்பித்த சில வர்மக்கலைகளில் “அகஸ்தியர் வர்ம திறவுகோல்”, “அகஸ்தியர் வர்ம கண்டி”, “அகஸ்தியர் ஊசி முறை வர்மம் “, “அகஸ்தியர் வசி வர்மம்”, “வர்ம ஒடிவு முறிவு”, “அகஸ்தியர் வர்மக் கண்ணாடி”, “வர்ம வரிசை”, “அகஸ்தியர் மெய் தீண்டாக்கலை” ஆகியவை குறிப்பிடத்தக்கவை. “ஜடாவர்மன் பாண்டியன்” என்ற மன்னன் தான் இதில் வல்லவனாகத் திகழ்ந்தான். பின்னர் பாண்டிய இனம் அழியத்தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்குப் பின்னர் வந்த சோழர்கள் இதனைக் கற்றனர்.

பின்னர் இந்தக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது. காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி புத்தமதத்தைப் பரப்பச் சீனா சென்றபோது இந்தக் கலையும் அங்கு பரவியது. “Tenjiku Naranokaku” என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் “The fighting techniques to train … Read More »

Leave a Reply

Your email address will not be published. Please mark all required fields.