ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒன்றை புரியவைக்க நினைத்தார். எல்லாரையும் அழைத்து உக்கார வைத்து, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காண்பித்தார்.
அவ்வளவுதான், ‘வாழ்க்கைத் தத்துவம் இதுதான்’னு சொல்லி போகச் சொல்லிட்டார்.
சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே ஒரு சீடன் மட்டும் வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்துதிட போகுதுன்னு குழம்பினவன், மெதுவாக குருவையே எழுப்பி கேட்டான்.அவர் கேட்டார்.. ‘என் வாய்குள்ள என்ன இருந்தது?’
‘நாக்கும் உள்நாக்கும் இருந்தது!’
‘பல் இருந்ததா?’
‘இல்லை.’
‘அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.’
திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தையும் விளக்கும் வகையில், ஒவியங்களாக வரைந்துள்ளார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர். சிறுவயது முதலே கல்வியின் மீதும், தமிழ் மொழியின் மீதும் தனக்கு இருந்த ஆர்வமே இந்த முயற்சியை செய்யத் தூண்டியதாகக் கூறுகிறார் கணினி அறிவியலில் இளநிலை படிக்கும் அந்த மாணவி.
விருதுநகர் மாவட்டம் மாணிக்கம் நகரில் வசித்து வரும் சேர்மநாதனின் மகள் ஹேமசௌந்தரி. சிறுவயது முதலே, ஓவியம் வரைவதில் திறன் பெற்றவராய் திகழ்ந்த இவர், தமிழ்ப் பற்றின் காரணமாக, திருக்குறளின் 133 அதிகாரங்களையும் ஓவியங்களாக தீட்டியுள்ளார்.இவரது எண்ணங்கள் மூலம், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரமும், வண்ண வண்ண ஒவியங்களாக உயிர் பெற்றுள்ளன. கற்றோருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு என்பதற்கேற்ப தன்னுடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிவதாக கூறுகிறார் இவர்.
21 மீட்டர் நீளமும் ஒரு அடி அகலமும் உள்ள காகிதத்தில், சுமார் 3 வார காலம் இடைவிடாது வரைந்து தன் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் ஹேமசௌந்தரி. தன் முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது 1330 திருக்குறளுக்கும் ஒவியங்களால் விளக்கம் அளிக்கும் பணியை தொடங்கியிருக்கிறார் இவர். தங்கள் மகளின் முயற்சிக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாக கூறும் ஹேமசௌந்தரியின் பெற்றோர், அவரது அடுத்த முயற்சியும் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
படித்துக் கொண்டிருக்கும் போதே, காலையிலும், மாலையிலும் ஓய்வு நேரத்தில் இத்தகைய சாதனை முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்கின்றனர் ஹேமசௌந்தரியின் ஆசிரியர்கள். செய்யுள் வடிவிலான திருக்குறளுக்கு, ஓவியம் மூலம் விளக்கம் கொடுத்திருப்பது வித்தியாசமான முயற்சி என்றும் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
கல்வி பயிலும் வயதில் ஏதாவது ஒரு துறையில் சாதனை புரிய வேண்டும் என்று ஒவ்வொரு மாணவரும் கருதுவது உண்டு. பெற்றோர், ஆசிரியர், மற்றும் நண்பர்கள் அளிக்கும் ஊக்கமே, இத்தகைய சாதனை இலக்குகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திண்மையை மாணவர்களுக்கு அளிக்கும் என்பது கல்வியாளர்களின் கருத்து.
Read More »
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் – இப்படி சொன்னவர் யார் தெரியுமா ? நம் தேச தந்தை காந்தியடிகள் !
மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர…் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் ‘தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது’ என்று குறிப்பிட்டார்.
கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, ‘இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளு வரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்’ என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்…
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.
இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், ‘நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே… இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்றார்..
தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம் !!!
ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு. தெரிந்து கொள்வோம்.
1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்22. கோயில் நகரம் – மதுரை23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி) … Read More »
மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!!
மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக, அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான்.
உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது.
என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும், என வேண்டினான்.
இராவணன் உபதேசித்தான் ……..
1. உன் சாரதியிடமோ, வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வர்.
2. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என எண்ணாதே.
3. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.
4. நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல், எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே.
5. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே, ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.
6. இறைவனை, விரும்பினாலும் மறுத்தாலும், முழுமையாகச் செய்.
எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை?
காமராசரின் ஆட்சி காலம் ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்! நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக முன்னிருத்தினார்.
ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்! 1.நெய்வேலி நிலக்கரித் திட்டம் 2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை6.கல்பாக்கம் அணுமின் நிலையம்7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை11.துப்பாக்கித் தொழிற்சாலை12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்13.சேலம் இரும்பு உருக்காலை14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்17.சென்னை அனல்மின் நிலையம்18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலைஇவை மட்டுமா?மணிமுத்தாறுஆரணியாறுசாத்தனூர்அமராவதிகிருஷ்ணகிரிவீடூர்வைகைகாவிரி டெல்டாநெய்யாறுமேட்டூர்பரம்பிக்குளம்புள்ளம்பாடிகீழ்பவானிஎன்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை! அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14. இன்னும் சொல்லவா? 159 நூல் நூற்பு ஆலைகள்4 சைக்கிள் தொழிற்சாலைகள்6 உரத் தொழிற்சாலைகள்21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்ரப்பர் தொழிற்சாலைகாகிதத் தொழிற்சாலைஅலுமினிய உற்பத்தித் தொழிற்சாலைகிண்டி,விருதுநகர்,அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி…என்று தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார். மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் … Read More »
நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ். ச…ென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது.ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார்.
“சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்துவிடத்தான் அழைத்தேன்” என்றார்/ பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் .
சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார்.அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர்.வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டுபுத்தகத்தை எடுத்துவரச் சொன்னார். தேதிவாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, ‘எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.
பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒருமுறை இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ‘ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஏதாவது செய்துகொள்ளுங்கள்’ என்றார் கஸ்தூரி ரங்கன். பதிலளித்த பெருந்தலைவர் ‘அந்த பணத்தை வைத்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்’ என்று யோசித்தவர் ‘ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்’ என்றார்.
கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததைவிட கூடுதல் விலை. … Read More »
கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்துண்டால் துடைத்து விட்டு.. “இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?” என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் “ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.. “இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!” என்றார். அவன் எழுந்து கேட்டான் “நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?” என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. “நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?
பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வராய் பதவி வகித்திருந்த சமயம், ஊரிலிருந்து அவரது தங்கை நாகம்மையிட்மிருந்து ஒரு கடிதம் வந்தது, அதில், “அண்ணே! எனக்கு உடம்பு சரியில்லை, மருத்துவம் பார்க்க பெரிய டாக்டரிடம் போக வேண்டும், அதற்கு நிறைய பணம் வேண்டும் அனுப்பி வையுங்கள் ” என்று எழுதி இருந்தார்கள்.
இதைப் படித்த காமராஜருக்கு கோபம் வந்து விட்டது, உடனே அவர் 20 ரூபாய் பணத்தை மட்டும் மணி ஆர்டரில் அனுப்பிவிட்டு கீழ் கண்டவாறு ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்.
அன்பு நாகம்மை நீ பெரிய டாக்டரிடம் எல்லாம் போக வேண்டாம்! மதுரையிலேயே அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கு. அங்கெ போனால் இலவச வைத்தியம் கிடைக்கும். உன் கை செலவுக்கு 20 ரூபாய் மட்டும் அனுப்பி இருக்கிறேன். இதற்கு மேல் என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே…!
கண்டுபிடிக்கப்பட்டது முதல் இன்றுவரை வடிவமைப்பில் மாறுதல் இல்லாமல் இருப்பது ‘சேஃப்டி பின்’ மட்டுமே. இது, 1849-ல் கண்டுபிடிக்கப்பட்டது.